செளதி அரேபியாவில் இதுவரை யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை


செளதி அரேபியாவில் இருக்கும் முஸ்லிம்களின் புனித தளமான மெக்கா மற்றும் மெதினாவுக்குள் நுழைய வெளிநாட்டினருக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.


செளதி அரேபியாவில் இதுவரை யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.


இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப் புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்திற்கு 15 டன்கள் மருத்துவ நிவாரண பொருட்களை இந்திய அரசு வழங்கியுள்ளது.


இந்த உதவிப் பொருட்களை இந்தியாவிலிருந்து கொண்டுசென்ற இந்திய விமானப் படை விமானம், அங்கிருந்து டெல்லி திரும்பியபோது, அந்நகரத்தில் வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த 76 பேர் மற்றும் வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட ஏழு நாடுகளை இருந்த 36 பேரை அழைத்து வந்துள்ளது. தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, தனிமைப்படுத்தப்பட்ட பின் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.


ஜப்பான் துறைமுகம் ஒன்றில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் சிக்குண்டிருந்த இந்தியாவை சேர்ந்த 119 பேர் மற்றும் இலங்கை, தென்னப்பிரிக்கா, நேபாளம், பெரு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஐந்து பேருடன் டோக்கியோ நகரத்திலிருந்து கிளம்பிய ஏர் இந்திய விமானம் டெல்லி வந்தடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.