ஜப்பானில் முக கவசத்தின் பயன்பாடு அதிகம், சாதாரண காய்ச்சல், சளி இருந்தாலே அவர்கள் முக கவசத்தை பயன்படுத்துகின்றனர். மேலும் ஷாப்பிங் மால், ஹோட்டல் என மக்கள் கூடும் இடங்களில் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்று அதிகம் பரவாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், மக்கள் தங்களின் பாதுகாப்பையும், பிறரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் நடந்து கொள்வதாகவும், சுகாதாரத்தை பின்பற்றுவதாகவும் ஜப்பான் மக்கள் கூறுகின்றனர்.
உலக மக்கள் இனியாவது சுகாதாரமாக தங்களது சுற்றத்தை வைத்துக்கொள்வது, சாதாரண காய்ச்சல், சளி இருந்தாலே முக கவசம் பயன்படுத்துவது போன்ற செயலில் ஈடுபட்டால், பல பெரிய நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
ஜப்பான் சுலபமாகக் கையாண்டது எப்படி