தொழில் வளம் அதிகம் உள்ள இத்தாலியின் வடக்கு பகுதிகளில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது

இதுவரை இத்தாலியில் கிட்டத்தட்ட 400 பேர் அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற அறிவிப்பை அடுத்து, ஒரே நாளில் (புதன்கிழமை) பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 80க்கும் மேலாக அதிகரித்துள்ளது.


தொழில் வளம் அதிகம் உள்ள இத்தாலியின் வடக்கு பகுதிகளில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது.


மிலன் மற்றும் வெனிஸ் அருகே உள்ளே வெனிட்டா ஆகிய பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பு கடுமையாக உள்ளது. இதுவரை இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.


கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைளை அந்நாட்டு அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. நாட்டு மக்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகளை அரசு அளித்து வருகிறது.